Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஜூலை 28 , மு.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
இம்முறை அம்பாறை மாவட்டத்துக்கு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கட்சியினால் வழங்கப்படுகின்றபோது அது அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கே வழங்கப்படும். வேறு எந்த பிரதேசங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படமாட்டாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய முன்னணியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களின் வெற்றிக்காக, அட்டாளைச்சேனை பிரதான வீதி தபாற்கந்தோருக்கு அருகாமையில் நேற்று திங்கட்கிழமை (27) இரவு நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பிரும் அட்டாளைச்சேனை அமைப்பாளருமான ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அவர் மேலும் உரையாற்றுகையில்,
அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு இம்முறை தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும். இதில் எந்தவிதமான சந்தேகமும் கொள்ளத்தேவையில்லை. இவை கட்சியின் தலைமையினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களாகும். இம்முறை அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் நாடாளுமன்ற தேர்தல்களுக்காக வேட்பாளர்களை தெரிவு செய்ததில் பல விமர்சனங்கள் தெரிவிக்கப்படுகின்ற நிலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லா வேட்பாளர்களும் புதியவர்களாகவும் அம்பாறை மாவட்டத்தில் பழைய முகங்களா? என்ற விமர்சனங்கள் பரவலாக எழுந்துள்ளது.
கட்சியினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுவதில், கட்சியின் தொண்டர்கள் முழு அர்ப்பணிபுடன் செயற்பட வேண்டும். நிந்தவூருக்கு தேர்தல் மூலமாகவும் தேசியப்பட்டியல் ஊடாகவும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழமையாக வழங்கப்பட்டு வந்துள்ளதாக விமர்சிக்கின்றனர். இப்போதும் நிந்தவூருக்கு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களா? என்ற விமர்சனங்களும் தெரிவிக்கப்படுகின்ற காலகட்டத்தில் கட்சியும் தலைமையும் உள்ளது.
தற்பொழுது இம்மாவட்டத்துக்கு மயில் வந்திருக்கின்றது. இக்கட்சியின் தலைவருக்கு நீதிமன்றத்தின் முன்னால் கல் எறிவதும் சண்டை பிடிப்பதும் வழமை. இவரின் கட்சியும் அவரும் வன்னி மாவட்டத்திலே வெற்றி பெறுவது நிச்சயமில்லை. அப்படியிருக்க அம்பாறை மாவட்டத்தில் வெற்றி பெறுவரா? இவரது கட்சி சார்பாக இம்முறை தேர்தலில் போட்டியிடும் முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தனது பதவியை இராஜினாமா செய்யாமல் தேர்தல் வேட்பாளர் படிவத்தில் ஒப்பமிட்டுள்ளார்.
இதற்காக வழக்கு தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இவர் தற்செயலாக தெரிவானாலும் நாடாளுமன்றம் செல்ல முடியாது. அவ்வாறு செல்வாராயின் எனது காதினை அறுப்பேன். இதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஐக்கிய தேசிய முன்னணி இம்முறை பெரும் வெற்றி பெறவுள்ளது. ரணில் விக்கிரமசிங்க பிரதமராக உள்ளார். இதில் நமது கட்சி இந்த ஆட்சியில் பெரும் பேரம் பேசும் சக்தியாக இருக்க உள்ளது. அம்பாறை மாவட்டம் எமது கட்சியின் இதயமாகவுள்ளதால், இங்கு போட்டியிடும் மூன்று வேட்பாளர்களையும் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று வெற்றிபெறச் செய்யவேண்டும்.
30 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago