Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஓகஸ்ட் 01 , மு.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.ஏ.ஸிறாஜ்
'பொத்துவில் தொகுதிக்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்திலிருந்து ஒருவர் நாடாளுமன்றம்; செல்ல வேண்டும் என்ற நோக்கத்திலேயே இம்முறை ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் போட்டியிடுகின்றேன்' என்று வேட்பாளர் யு.கே.ஹகமட்லெவ்வை தெரிவித்தார்.
பாலமுனைக் கிராமத்தில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,
'அட்டாளைச்சேனை பிரதேசம் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக ஒரு நாடாளுமன்ற பிரதிநிதி இல்லாமல் அரசியல் அனாதையாக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் அட்டாளைச்சேனைக்கு வரும் அரசியல் தலைமைகள் தேசியப்பட்டியல் ஆசையை மக்களிடம் ஊட்டிவிட்டு நாடாளுமன்றம் சென்று விடுகின்றனர். பின்னர், அடுத்த தேர்தல் வரும் போது வருவார்கள்.
இனிமேல் இதனை இப்பிரதேச மக்கள் ஒரு போதும் நம்பமாட்டார்கள். அட்டாளைச்சேனை மக்களை; இனி ஏமாறமாட்டார்கள் என்பதை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை புரிந்துக்கொள்ள வேண்டும்.
இன்று அட்டாளைச்சேனை பிரதச வாக்காளர்களுக்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதனை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த பிரதேசத்துக்கு நாடாளுமனற பிரதிநிதித்துவம் கிடைக்குமென்றால், இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியின் மூலம்தான் கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றது.
இதன் காரணமாகவ இன்று அட்டாளைச்சேனையில் முப்பது வருடகாலமாக நாடாளுமன்ற பிரதிநிதி ஒருவர் இல்லாத குறையை என்மூலம் நிறைவு செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை முடிவு செய்து என்னை இந்த பிரதேசத்துக்கு நிறுத்தியுள்ளது.
நாட்டில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த நாட்டை மஹிந்த தலைமையிலான கொடிய ஆட்சியிலிருந்து மீட்டு, ஐக்கிய தேசியக் கட்சியிடம் மக்கள் ஒப்படைத்தனர்.
இந்த நல்லாட்சி மலர்ந்து சென்று கொண்டிருக்கும் வேளையில், மீண்டுமொரு பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டது. எனவே, இந்த தேர்தலிலும் இந்த நாட்டு மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியிடம் இந்த நாட்டின் ஆட்சியை ஒப்படைக்க தீர்மானித்து விட்டனர்.
இதனை சகித்துக்கொள்ள முடியாத மஹிந்த உட்பட அவரது அணியில் போட்டியிடும் இனவாதிகள், சிறுபான்மை சமூகத்துக்கு எதிரான கருத்துக்களை கூறி பெரும்பான்மை சமூகத்தினரின் வாக்குகளை கொள்ளையடிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர்.
எனவே, சிறுபான்மை சமூகத்தினர் ஒன்றிணைந்து ஐக்கிய தேசியக் கட்சியிடம் இந்த நாட்டின் ஆட்சியை ஒப்படைப்பதுக்கு ஒன்றுபட்டது போன்று, நாட்டிலுள்ள சிங்கள சமூகத்தினரும் இன்று நூறு வீதம் ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவளிக்க ஒன்றுப்பட்டுள்ளார்கள் என்ற நல்ல செய்தியை உங்களுக்கு தெரிவிப்பதில் சந்தோசமடைகின்றேன்.
எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்து என்னை வெற்றிபெறச் செய்வதன் மூலம் அட்டாளைச்சேனை மண் கடந்த முப்பது வருடகாலமாக இழந்திருந்த அரசியல் அதிகாரத்தினை பெறமுடியும்' என கூறினார்.
13 minute ago
35 minute ago
45 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
35 minute ago
45 minute ago
46 minute ago