Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 10 , மு.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.முஜாஹித்,பைஷல் இஸ்மாயில்
நாட்டில் தொழில் வாய்ப்பு அற்றுள்ள இளைஞர், யுவதிகளுக்கு 60 மாதங்களில் தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்காக பிரதான திட்டம் வகுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கல்முனையில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு குழுவொன்று அமைக்கப்படும். 10 வருடங்களுக்கு மேல் அரசாங்கக் காணிகளில் குடியிருப்பவர்களுக்கு நிரந்தர காணி உறுதிப்பத்திரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம்' என்றார்.
'அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளுக்கு அமைய அமைச்சர் கருஜயசூரியவின் ஒப்புதலுடன் சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபையை உருவாக்குவேன். கல்முனை பிரதேசத்தில் முஸ்லிம்கள் புராதன காலந்தொட்டு வசித்து வருவதால், பிரதான திட்டத்துக்குள்; கல்முனையை உள்வாங்கியுள்ளேன். மகாவலி திட்டத்தின் மூலம் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 18 ஆயிரம் ஹெக்டேயரில் வேளாண்மை செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளோம்.' எனவும் அவர் தெரிவித்தார்.
'இந்த நாட்டிலுள்ள சகல மாகாணங்களையும் இணைத்து 2,500 கிராமங்களாக பிரித்து இதனை முன்னேற்றுவதற்கான பாரிய திட்டமொன்றை உருவாக்கி ஒவ்வொரு கிராமத்துக்கும் பொருளாதார மத்திய நிலையங்களை உருவாக்குவதற்கும் திட்டமிட்டுள்ளோம்.
மிக முக்கியமாக மீன்பிடித் தொழிலுக்காக ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து பிடிக்கப்பபடும் மீன்களை குளிரூட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவுள்ளோம். கல்முனை நகரத்தை புதிய நகரமாக கட்டியெழுப்புவது இதன் முக்கியமானதாக காணப்படுகின்றது. அந்த வேலையை செய்வதற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் பாரம் கொடுத்துள்ளேன். இதனை பாரிய நகரமாக மாற்ற வேண்டும். இதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்' எனவும் அவர் கூறினார்.
'நாங்கள் எல்லோரும் சேர்ந்து நல்லாட்சியை உருவாக்கியுள்ளோம்' எனவும் அவர் கூறினார்.
16 minute ago
23 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
23 minute ago
37 minute ago