2025 ஒக்டோபர் 18, சனிக்கிழமை

30 கோடி ரூபாய் பெறுமதியான கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது

Freelancer   / 2025 ஒக்டோபர் 18 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை -  மஹியங்கனை பகுதியில்  30 கஜமுத்துக்களுடன்  சந்தேக நபர் ஒருவர் நேற்று  (17) கைது செய்யப்பட்டுள்ளார். 

மஹியங்கனை வனஜீவராசிகள் பாதுகாப்ப திணைக்கள அதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட  சோதனை நடவடிக்கையின் போது  சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபர்  இந்த கஜமுத்துக்களை 30 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய தயாராக இருந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் நீண்ட காலமாக கஜமுத்துக்களை விற்பனை செய்து வந்துள்ளதாக விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த வனஜீவராசிகள் பாதுகாப்ப திணைக்கள அதிகாரிகள் நடவடிக்க எடுத்துள்ளனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .