Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 12 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சபேசன்
அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள், நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டிய ஒரு தருணத்தில் இருக்கின்றார்கள். கடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் நாம் பாரிய தவறினை இழைத்திருந்தோம். இதனால் எமது சமுகமே வெட்கித்தலைகுனிந்து நடுத்தெருவில் நிற்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டதை நாம் இலகுவில் மறந்துவிட முடியாது என தமிழரசுக்கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
கல்முனையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
எமது அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் அடிப்படைப்பிரச்சினைகள் அன்றி அன்றாடம் ஏற்பட்ட பிரச்சினைகளைக்கூட நாடாளுமன்றத்தில் குரல்கொடுக்கவும் தீர்வைப்பெறவும் எவருமே இல்லாத நிலை ஏற்பட்டது. இப்படிப்பினையை நாம் ஒருபாடமாகக்கொண்டு யாருக்கு வாக்களிக்கின்றோம் என்று அலசி ஆராய்ந்து இரண்டு நாடாளுமன்ற பிரதிநிதியினைப் பெறக்கூடிய வகையில் எமதுமக்கள் அனைவரும் தமிழ்த் தேசியத்தின் வீட்டுச்சின்னத்துக்கு வாக்களிக்கவேண்டும்.
எமது உரிமைப் போரின் பயணத்தின் இறுதிக்கட்டத்தில் நிற்கின்ற இத்தருணத்தில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களாகிய நாம் ஒன்றுபட்டு எமது மாவட்டத்தில் இரண்டு பிரதிநிதியை பெறக்கூடியவகையில் வாக்களித்து, தமிழ்த் தேசியத்தின் மீது தமக்குள்ள அக்கறையை வெளிப்படுத்த கிடைத்த சிறந்த சந்தர்ப்பமாக இத்தேர்தலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
5 minute ago
13 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
13 minute ago
33 minute ago