Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Sudharshini / 2015 ஓகஸ்ட் 22 , மு.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது கடற்கரையில் வெள்ளிக்கிழமை (21) நின்றுக்கொண்டிருந்த வலதுகுறைந்த சிறுவன், கடல் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளான் என பொலிஸார் தெரிவித்தனர்.
சாய்தமருது ஒராபிபாசா வீதியைச் சேர்ந்த தௌஷீக் அஹமத் என்ற 15வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வலது குறைந்தோருக்கான பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மேற்படி சிறுவன், பாடசாலை நிருவாகம் ஏற்பாடு செய்திருந்த சுற்றுலாவிற்கு சென்றுள்ளான். இதன்போது கடற்கரையோரம் நின்றுகொண்டிருந்த மேற்படி சிறுவன் தீடீரென மயங்கி வீழ்ந்துள்ளான்.
மயங்கிய நிலையில் கிடந்த சிறுவனை கடலலை இழுத்துச் சென்றுள்ளது. இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும், சிகிச்சை பலன் இன்றி சிறுவன் உயிரிழந்துள்ளான் என தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் குறித்து கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago