2021 மார்ச் 04, வியாழக்கிழமை

குட்டையிலிருந்து வயோதிபரின் சடலம் மீட்பு

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 22 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை சுனாமி வீட்டுத் திட்டத்தை சேர்ந்த, அப்துல் ஹமீத் முஹம்மத் இப்றாஹிம் (வயது 65) என்பவர் குட்டை ஒன்றிலிருந்து இன்று சனிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி வயோதிபரை நேற்று இரவு முதல் காணாத நிலையில், உறவினர்கள் அவரை தேடியுள்ளனர். இந்நிலையில், மருதமுனை ஷம்ஸ் பாடசாலை மைதானத்துக்கு அருகிலுள்ள குட்டை ஒன்றிலிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வயோதிபருக்கு அடிக்கடி வலிப்பு ஏற்படுவதாகவும் அந்நிலையில் அவர் மயங்கி தீடீரென கீழே வீழ்ந்து விடுவார் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .