2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

மட்டு, அம்பாறைக்கு சுகாதார அமைச்சர் எதிர்வரும் 28 ஆம் திகதி விஜயம்

Kogilavani   / 2011 ஜூன் 11 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 28ஆம் திகதி செவ்வாய்க் கிழமை அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

கல்முனையில் அன்று நடைபெறவுள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைத் திறப்பு விழா, அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்களுக்கான விடுதிக்  கட்டிடத் தொகுதி திறப்பு விழா மற்றும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை அதி தீவிர கண்காணிப்பு பிரிவு கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா  ஆகியவற்றில் அமைச்சர் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

மேலும் அன்று மாலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடைபெறும் மாவட்டத்தின் சுகாதார அபிவிருத்தி தொடர்பான  கலந்துரையாடலிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்நிகழ்வில்,  பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபையிர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .