Freelancer / 2026 பெப்ரவரி 07 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய தேசிய கனிமக் கொள்கை முறைப்படி அறிமுகப்படுத்தப்படும் வரை, நாட்டில் கனமான கனிமங்களை அகழ்வதற்கான அனைத்து வகையான அனுமதிப் பத்திரங்களை வழங்குவதையும் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சில் நேற்று (06) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இதனைத் தெரிவித்தார்.
புதிய தேசிய கனிமக் கொள்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று, அது நாடாளுமன்றத்தின் ஊடாக நிறைவேற்றப்படும் வரை இந்த இடைநிறுத்தம் அமுலில் இருக்கும்.
குறிப்பாக இல்மனைட், ரூட்டைல், சிர்கான் மற்றும் கார்னட் போன்ற பெறுமதிமிக்க கனமான கனிம வகைகளுக்கே இந்தத் தடை அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
முறையான கொள்கைத் திட்டம் வகுக்கப்படும் வரை நாட்டின் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி மேலும் சுட்டிக்காட்டினார். (a)

22 minute ago
52 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
52 minute ago
2 hours ago
3 hours ago