2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

அட்டாளைச்சேனையை சேர்ந்த 3 பெண்கள் கண்டியில் கைது

Super User   / 2011 ஜனவரி 13 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.எம்.ரிஃபாத்)

கண்டி நகரில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியதாகக் கூறப்படும், அட்டாளைச் சேனை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பெண்களை கண்டி பொலிஸார் இன்று வியாழக்கிழமை மாலை கைது செய்துள்ளனர்.

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 60-70 வயது மதிக்கக்கத்தக்க பெண்ணொருவரும் அவரின் இரு மகள்களுமே கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் 60 ஆயிரம் ரூபா பணமும் இருந்தது.

இம்மூவரும் அட்டாளைச்சேனையிலிருந்து கண் சிகிச்சைக்ககாக கண்டிக்கு வந்ததாகவும் இவர்கள் வழிதெரியாமல் கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பிரதேசத்திற்கு சென்றபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--