2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

30 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 ஒக்டோபர் 30 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.ஹனீபா

பொத்தவில் பிரதேசத்தில் 30 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில், சுயதொழில் உபகரணங்களும் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கான உபகரணங்கள்  புதன்கிழமை(29) வழங்கி வைக்கப்பட்டன.

திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து 30 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் இவ் உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டன.

பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் எம்.எஸ்.ஏ.வாஸித் தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இவ்வைபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்துகொண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான உபகரணங்களை வழங்கி வைத்தார்.

இதன்போது, பொத்தவில் அல் கலாம் வித்தியாலயத்தில் ரூபாய் 5 இலட்சம் நிதியில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள பிரதான நுழைவாயிலுக்கான அபிவிருத்தி வேலைகளையும் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆரம்பித்து வைத்தார்.

   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .