2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

அம்பாறையின் 37 பகுதிகளில் மின்தடை

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 17 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

அம்பாறை மின்பொறியலாளர் பிரதேசத்திற்குட்பட்ட 37 இடங்களில் இம்மாதம் 23ஆம் திகதியும் நவம்பர் மாதம் 6ஆம் திகதியும் மின்தடை ஏற்படும் என பிரதேச மின்பொறியியலாளர் தெரிவித்தார்.

அம்பாறை கிறிட் மின் உற்பத்தி நிலையத்தில் திருத்த வேலைகள் இடம்பெறவிருப்பதனாலேயே இம்மின் தடை ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

23ஆம் திகதி சனிக்கிழமையும் நவம்பர் 6ஆம் திகதி சனிக்கிழமையும் காலை 7.30 மணி முதல் மாலை 5.00 மணிவரை கல்மடுவ, ஹிங்குரான, தமண, இறக்காமம், அக்கரைப்பற்று, திருக்கோவில், பொத்துவில், பாணம, சியம்பலாண்டுவ, தொம்பகஹவெல, அம்பாறைநகர், கெமுனுபுர, சுதவெல்ல, கொண்டவெட்டுவான், பரகஹவெல, ஹிமதுராவ, கலஹிற்றியாகொட, நாமல்ஓயா, இங்கினியாகல, உகன, கொணாகொல்ல, பியங்கல, 69ஆம் சந்தி, தம்பிட்டிய, மகாஓயா, சேரங்கட, பதியத்தலாவ, நவகங்கொட, வளத்தாப்பிட்டி, மல்வத்த, வீரகொட, மத்தியமுகாம், 11,13,5,17,21 ஆம் கொலனிகள் ஆகிய இடங்களில் மின்தடை அமுலில் இருக்கும் என மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .