2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு பாராட்டு

Super User   / 2010 ஒக்டோபர் 27 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ஹனீக் அஹமட்)

5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியாக தமிழ் மொழி மூலம் முதலிடம் பெற்ற தம்பிலுவில் கலைமகள் வித்தியாலய மாணவி மாலன் சுபதா உள்ளிட்ட திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் மேற்படி பரீட்சையில் சித்தியடைந்த 40 மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் வைபவம் இன்று மாலை தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

தம்பலுவில் றேஞசஸ் கல்விப் பிரிவு மற்றும் தம்பிலுவில் பொதுமக்களின் அனுசரணையுடன் இடம்பெற்ற இவ்வைபவத்தில் பிரதம அதிதிகளாக, திருக்கோவில் பிரதேச செயலாளர் வி. அழகரெத்தினம் மற்றும் திருக்கோவில் வயலக் கல்விப் பணிப்பாளர் திருமதி என்.புள்ளைநாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பாராட்டுப் பெற்ற மாணவர்கள், முதலில் தம்பிலுவில் சிவலிங்கப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து வாகனப் பேரணி மூலமும், பின்னர் நடைபவனியாகவும் விழா அரங்குக்கு அழைத்து வரப்பட்டனர்.

பாராட்டுப் பெற்ற மாணவர்களுக்கு நினைவுச் சின்னம், வாழ்த்துப் பா மற்றும் பணம் வைப்புச் செய்யப்பட்ட வங்கிப் புத்தகம் ஆகியன வழங்கி வைக்கப்பட்டன.



 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X