Editorial / 2026 ஜனவரி 07 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்
போதை பொருள் வாங்குவதற்கு பணம் தேவைக்காக 14 வயது சிறுமியான தனது மகளின் கையில் இருந்த தங்க வளையலை கழட்டி தருமாறு அடித்து தாக்கியதில் சிறுமி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவத்தை அடுத்து தந்தையை கைது செய்து பின்னர் எச்சரித்து விடுவித்த சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மாவிலங்குதுறை பிரதேசத்தில் திங்கட்கிழமை (05) அன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை ஆகியுள்ள நிலையில் அதை வாங்குவதற்கு பணம் இல்லாததை அடுத்து 14 வயது சிறுமியான அவரது மகள் அணிந்திருந்த 3 பவுன் தங்க வளையலை கழட்டி தருமாறு கோரியுள்ளார்.
அதை கழட்டி கொடுக்க சிறுமி மறுத்ததை அடுத்து சிறுமியை அடித்து தாக்கியதில் சிறுமி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்ததையடுத்து அந்த நபரை கைது செய்ய சென்ற போது பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவரை கைது செய்து எச்சரித்து விடுவித்தனர்.
17 minute ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
3 hours ago
4 hours ago
5 hours ago