2026 ஜனவரி 09, வெள்ளிக்கிழமை

பூட்டை வெட்டி சிறையிலிருந்து தப்பிய இளைஞன்

Janu   / 2026 ஜனவரி 08 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெராயின் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டு, தங்காலை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இளைஞன் ஒருவன் சிறையறை  கதவின் பூட்டை வெட்டி தப்பிச் சென்ற சம்பவத்தால் , தங்காலை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர், மற்றும்  பொலிஸ் கான்ஸ்டபிள்  ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தங்காலை, பல்லி குடாவ பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார். 

குறித்த இ​ளைஞன் கடந்த திங்கட்கிழமை (05) அன்று 10 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்

தப்பியோடிய சந்தேக நபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .