2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

அக்கரைப்பற்று மாநகரசபையின் வரவு – செலவுத்திட்டம் 8 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 25 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


அக்கரைப்பற்று மாநகரசபையின் 2013ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் 8 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

அக்கரைப்பற்று மாநகரசபையின் 2013ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தை அக்கரைப்பற்று மாநகரசபை முதல்வர் அதாவுல்லா அஹமட் சக்கி நேற்று திங்கட்கிழமை சபையில் முன்வைத்தார்.

இச்சபையில் தேசிய காங்கிரஸின் 08 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒரு உறுப்பினரும் பிரசன்னமாகியிருந்தனர்.

சமர்ப்பிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டத்தின் பிரகாரம் உத்தேச வரவுத்தொகையாக 36 கோடி 18 இலட்சத்து 30 ஆயிரத்து 681 ரூபா எனவும் உத்தேச செலவாக 36 கோடி 18 இலட்சத்து 29 ஆயிரத்து 438 ரூபா 22 சதம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதன் பிரகாரம் செலவிலும் மிஞ்சிய வரவாக 1242 ரூபா 78 சதம்  வருவதாகவும் தெரிவிக்கப்பட்டன.


  Comments - 0

 • சிறாஜ் Tuesday, 25 December 2012 09:54 AM

  அப்பன்ட கணக்கு தப்புமா என்ன இது குதிரை கட்சிங்க‌

  Reply : 0       0

  umardeen Tuesday, 25 December 2012 03:31 PM

  தோற்றால் என்ன..... வென்றால் என்ன இவர்களுக்கு. ஊர் மக்கள் பண‌த்தில் விள‌யாடும் சபையல்லவா இந்த மகனார்ர சபை......?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .