Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 27 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் இன்றுவரை 34 விபத்துச் சம்பவங்கள் நடைபெற்றதுடன் அதில் நான்கு பேர் மரணமடைந்தும் உள்ளனர்.
கல்முனையின் பிரதான வீதி புனரமைக்கப்பட்டதன் பின் இப்பகுதியில் விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்தவாறு உள்ளது. இவ்விபத்துச் சம்பவங்கள் அதிகரிப்பதற்கு மிகப்பிரதான காரணம் பெற்றோரே ஆகும் என தமிழ்மிரருக்கு கருத்துத்தெறிவித்த கல்முனை வாகனப் போக்கு வரத்துப் பிரிவு பொருப்பதிகாரி எஸ்.ஐ.காமினி தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், பெற்றோருடைய பொருப்பற்ற தன்மை காரணமாக படிக்கும் மாணவர்களுக்கு மோட்டார் சைக்கிள்களையும்; செல்லிடத் தொலைபேசிகளையும் வாங்கிக் கொடுப்பதால்தான் அதிக விபத்துக்கள் நடைபெறுகிறன.
இதேபோல், மது அருந்திக் கொண்டும் தொலைபேசியில் பேசிக்கொண்டும் அதி வேகமாக வாகனம் ஓடுதல், வீதி ஒழுங்கை சரிவர பின்பற்றாமை போன்றவற்றாலும் விபத்துக்கள் அதிகரிக்கின்றன என்றார்.
sitheek Tuesday, 28 September 2010 02:31 PM
இது நன்றாக இருக்கிறது. யார் இவர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரம் வழங்கியது? அனுமதிப்பத்திரம் இல்லாவிட்டால் நீங்கள் சொல்வது சரி. அனுமதிப்பத்திரம் இல்லாதவர்களை பிடித்தால் பெற்றோர் தான் காரணம். பிடித்துபோடுங்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .