Princiya Dixci / 2021 ஜனவரி 22 , பி.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
காரைதீவில் முதற்தடவையாக மாணவர்கள் இருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து, அவர்களோடு தொடர்பிலிருந்த மூன்று வகுப்புகளில் கற்கும் 105 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் தஸ்லிமா பஷீர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்:
“கல்முனை அஸ்ரப் ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் காரைதீவைச் சேர்ந்த 50 வயதுடைய முகாமைத்துவ உதவியாளர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று இனங்காணப்பட்டதாக நேற்று (21) எமக்கு அறிவிக்கப்பட்டது. அவரை வைத்தியசாலையிலிருந்தே மட்டக்களப்புக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
“இதனையடுத்து நாம் உடனடியாக செயற்பட்டு, அவரது வீட்டுக்குச்சென்று விசாரித்ததுடன், குடும்பத்தாருக்கு அன்டிஜன் பரிசோதனையை முன்னெடுத்தோம். இதன்போது தரம் 11 மற்றும் தரம் 13 வகுப்புகளைச் சேர்ந்த அவரது மகனும் மகளும் கொரோனாத் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
“4ஆம் வகுப்பைச் சேர்ந்த மூன்றாவது மகளுக்கும் தாய்க்கும் தொற்றில்லை என முடிவு வந்துள்ளது. தொற்றுக்கள்ளான பிள்ளைகளை மருதமுனை கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதேவேளை, இந்த மூன்று மாணவர்களும் பயிலும் 3 வகுப்புகளைச் சேர்ந்த 105 மாணவர்களையும் குடும்பத்தையும் நேற்றிலிருந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதாகவும் அவர்களில் மேற்படி 3 மாணவர்களுடன் நெருங்கிப் பழகிய மாணவர்களை எதிர்வரும் திங்களன்று (25) பிசிஆர் பரிசோதனைக்குட்படுத்த இருப்பதாகவும் அவர் கூறினார்.
தேவைப்படின், அந்த வகுப்புகளுக்கான அவசியமெனக்கருதப்படும் ஆசிரியர்களையும் பிசிஆர் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் கல்வி கற்ற பாடசாலை மூடப்படுவது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளருடன் ஆலோசனை செய்தே அத்தீர்மானம் எடுக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
7 minute ago
28 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
28 minute ago
37 minute ago