அஸ்லம் எஸ்.மௌலானா / 2019 செப்டெம்பர் 22 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

இவ்வருட தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு, பாடசாலை மாணவர்களிடையே ஒழுங்கு செய்யப்பட்ட கிழக்கு மாகாண மட்டத்திலான இறுதிப்போட்டி, கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில், இன்று (22) நடைபெற்றது.
இதன் ஆரம்ப நிகழ்வு, கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தலைமையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில், மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எம்.வை.சலீம், வெளிநாட்டு வர்த்தக, மூலோபாய அபிவிருத்தி அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் உட்பட மாகாண, வலயக் கல்வி உயர் அதிகாரிகள், அதிபர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
இஸ்லாமிய பாரம்பரிய கலை, கலாசார நிகழ்ச்சிகள் பல இதன்போது மாணவர்களால் அரங்கேற்றப்பட்டன என்பதுடன், அரபு எழுத்தணி, பாரம்பரிய பொருட் கண்காட்சி என்பனவும் நடைபெற்றன.
வலய மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்கள், இந்த மாகாண மட்டப் போட்டியில் பங்குபற்றினர். இதன்போது 55 போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
9 hours ago
13 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
13 Jan 2026