2021 மார்ச் 03, புதன்கிழமை

தைப்பொங்கல்: ’மேன்மைக்கு எடுத்துக்காட்டு’

Princiya Dixci   / 2021 ஜனவரி 14 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

பொங்கல் என்பது தமிழர்களால் பாரம்பரியமாக சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா எனவும் நன்றியை பறைசாற்றும் மனித மேன்மைக்கு எடுத்துக்காட்டான தைப்பொங்கல் திருநாள் இன்று மலர்ந்திருப்பதாகவும், காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்துள்ளார். 

தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

நாட்டில் கொரோனா தாக்கம் காரணமாக தைப்பொங்கல் பண்டிகை சற்றுக் களையிழக்கலாம். எனினும், பாரம்பரியமாக தமிழ் மக்கள் பண்டுதொட்டு கைக்கொண்டுவருகின்ற நடைமுறைகள் அனைத்தும் இலகுவில் பின்பற்றக்கூடியவை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

கடந்த பல வருடங்களாக தமிழ் மக்கள் அனுபவித்த துன்ப துயரங்களுக்குத் தீர்வு காணும் வருடமாக இவ்வருடம் அமைய வேண்டும் என்பதுடன், மக்கள் வாழ்வில் ஒளி பொங்கி, அல்லல் நீங்க இத்தைத்திருநாளில் இறைவனை வேண்டுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .