Princiya Dixci / 2021 ஜனவரி 11 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

சகா
காரைதீவு பிரதேச சபை ஊழியர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று (11) உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து, அங்குள்ள நிதி மற்றும் நிர்வாகப் பிரிவுகள் உடனடியாக மூடப்பட்டன.
பிரதேச சபையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவரின் தந்தைக்கு இரு வாரங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், வீட்டிலுள்ள ஏனையோர் தனிமைப்படுத்தப்படுத்தலில் வைக்கப்பட்டு, பிசிஆர் செய்யப்பட்டபோது, நேற்று முன்தினம் அவரது மனைவிக்கும் காரைதீவு பிரதேச சபை ஊழியரான மகனுக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டது.
அதனையடுத்து, காரைதீவு பிரதேச சபையிலுள்ள தவிசாளர் கி.ஜெயசிறில் உள்ளிட்ட அனைத்து 65 ஊழியர்களுக்கும் இன்று அன்ரிஜன் சோதனை செய்யப்பட்டது. இதில் தவிசாளர் உள்ளிட்ட 64 பேருக்கு கொரோனாத் தொற்று இல்லை எனப் பெறுபேறு கிடைத்தது.
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் தஸ்லிமா பசீர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட இந்தச் சோதனையின்போது ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. இவர் நிதிப் பிரிவில் கடமையாற்றும் நிந்தவூரைச் சேர்ந்தவர்.
அதனையடுத்து மேற்படி இரு பிரிவுகளும் உடனடியாக மூடப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .