Editorial / 2020 ஓகஸ்ட் 10 , பி.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான், பி.எம்.எம்.ஏ.காதர்
அம்பாறை, சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சொறிக்கல்முனை பகுதியிலுள்ள வழுக்கமடு பாலத்தின் அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்தவரை முதலை இழுத்துச் சென்ற நிலையில், அந்நபரின் தலை மாத்திரம் நேற்று (09) மாலை மீட்கப்பட்டுள்ளது.
அப்பகுதியை சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க றோக்கு ஜோசப் என்பவரது தலையே, கிராம மக்களின் உதவியுடன் மீட்கப்பட்டதாக, சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
இம்மாதம் 08ஆம் திகதி வழமை போன்று மாடுகளை மேய்ப்பதற்றாக வயல்வெளிகளுடன் இணைந்த வழுக்கைமடு நீர்க்கால்வாயில் இறங்கிக் குளித்துள்ளார். இவ்வேளை, அந்நபரை கால்வாயில் இருந்த முதலை இழுத்துச்சென்றுள்ளது.
இவ்வாறு முதலை இழுத்தச் சென்றவரைக் காணவில்லையென குடும்பத்தவர்கள் தெரிவித்த நிலையில், கிராமத்தவர்களின் உதவியுடன் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, காணாமல்போனவரின் ஆடைகள் கால்வாய்க் கரையோரத்தில் இருந்து மீட்கப்பட்டன.
பின்னர் சுமார் 800 மீற்றர் தொலைவில் மேற்படி கால்வாயில் மிதந்து வந்த நிலையில் தலை மீட்கப்பட்டதுடன், மரணித்தவரின் சகோதரி அடையாளம் காட்டியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸார் அழைக்கப்பட்டதுடன், சவளக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025