2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

மழையால் அம்பாறையில் 369,800 பேர் பாதிப்பு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 09 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக அம்பாறை மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 369,800 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் தெரிவித்தார்.  

அத்துடன் 24,300 பேர் இடம்பெயர்ந்து பொது இடங்களில் தங்கியுள்ளதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

உகன பிரதேசத்திலேயே மழை காரணமாக வீடொன்று இடிந்து வீழ்ந்ததால், 60 வயது வயோதிபர் ஒருவர் பலியாகியதாகவும் அனர்த்த முகாமைத்துவ அம்பாறை மாவட்ட இணைப்பாளர் குறிப்பிட்டார்.  

இடம்பெயர்ந்த மக்களுக்கான சமைத்த உணவை பிரதேச செயலாளர் பிரிவுகளும் பொது அமைப்புக்களும் வழங்கி வருகின்றன.

ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, திருக்கோவில், அட்டாளைச்சேனை, நிந்தவூர், சம்மாந்துறை, காரைதீவு, நாவிதன்வெளி, உகன, தெஹியத்தகண்டிய, சாய்ந்தமருது, கல்முனை, பொத்துவில் ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இப்பகுதிகளில் பலத்த காற்று வீசியதால் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளது. இதனால் வீதிப் போக்குவரத்துக்கள் பாதிப்படைந்துள்ளதுடன், மின்சாரத் தடை  ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, அக்கரைப்பற்றில் நேற்று சனிக்கிழமை மாலை 6 மணி முதல்  இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை 215 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக பொத்துவில் வானிலை நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம்.நஜீப் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .