Princiya Dixci / 2021 ஜனவரி 11 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
கிழக்கு மாகாணத்தில் கடந்த 12 மணி நேரத்தில் 60 பேருக்கு கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கூடுதலாக கல்முனை தெற்கில் 15 பேரும் காரைதீவில் 13 பேரும் கிண்ணியாவில் 5 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், கிழக்கில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை, இன்று (11) 1,647 அதிகரித்துள்ளது.
கடந்தாண்டு மார்ச் மாதத்திலிருந்து பேலியகொட கொத்தணி மூலமாக இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 382 பேரும் கல்முனை பிராந்தியத்தில் 966 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 210 பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 66 பேருமாக 1,624 பேர் தொற்றுக்கிலக்காகியுள்ளனர்.
மேலும், வெளிநாட்டிலிருந்து வந்த, மினுவாங்கொட, கந்தக்காடு கொத்தணி, வெலிசற கடற்படை முகாம் போன்றவை மூலங்களிலிருந்து மீதி 23 தொற்றுக்கள் இனங்காணப்பட்டுள்ளன.
இதுவரை கிழக்கு மாகாணத்தில் சம்மாந்துறை, ஒலுவில், சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை, வவுணதீவு, காத்தான்குடி, நாவிதன்வெளி, ஆயைடிவேம்பு, உகனை இறுதியாக காத்தான்குடியிலும் மொத்தம் 10 கொரோனா மரணங்கள் சம்பவித்திருக்கின்றன.
கல்முனைப் பிராந்தியத்தில் 06 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 03 பேரும் அம்பாறைப் பிராந்தியத்தில் ஒருவருமாக இந்த 10 மரணங்களும் சம்பவித்திருக்கின்றன.
இத்தரவுகளை கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
கிழக்கிலுள்ள 08 கொரோனா சிகிச்சை நிலையங்களில் தற்போது 552 கொரோனாத் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இன்று (11) வரை 2,869 பேர் மேற்படி 8 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு, அவர்களில் 2,302 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 15 பேர் இடமாற்றப்பட்டுள்ளனர்.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago