2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

தரமற்ற உணவுப் பொருட்களை விற்ற வியாபாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 05 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எல்.அப்துல் அஸீஸ்)

கல்முனை நகர மற்றும் சந்தைப் பகுதிகளிலுள்ள உணவு விற்பனை நிலையங்கள் இன்று திடீர் பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டபோது, விற்பனைக்குத் தரமற்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய உணவுப் பொருட்களை வைத்திருந்த ஏழு வியாபாரிகள் இனங்காணப்பட்டு அவர்களுக்கெதிராக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி எம்.ஏ.சி.எம்.பஸால் தலைமையில் கல்முனை பொலிஸாரும், தெற்கு சுகாதாரப் பரிசோதகர்களும் இணைந்து மேற்கொண்ட திடீர் பரிசோதனையின்போது  விற்பனைக்குத் தரமற்ற  உணவுப் பொருட்களை விற்பனை செய்ய தயார் நிலையில் வைத்திருந்த 11 வியாபாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு இவர்களில் 7 வியாபாரிகளுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் எதிர்காலத்திலும் இவ்வாறான திடீர் பரிசோதனை மேற்கொண்டு இப்பிரதேச மக்களுக்கு தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்கவிருப்பதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கூறுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .