2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

கல்முனையில் மேம்பாலம் அமைக்கத் தீர்மானம்

Super User   / 2010 ஒக்டோபர் 10 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கல்முனை இரவெளிக் கண்டத்தையும் பிரதான வீதியையும் இணைக்கும் வகையில் மேம்பாலம் ஒன்றை  மிக விரைவில் அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பணிப்புரை விடுத்ததாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ.ஜவாத் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இன்று அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் அம்பாறையில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கல்முனையில் மேம்பாலம் ஒன்று அமைப்பதன் அவசியத்தை தான் எடுத்து கூறியதை அடுத்தே அவர்  மேற்படி உத்தரவு பிறப்பித்ததாக ஜவாத் குறிப்பிட்டார்.

இப்பாலம் அமைப்பது தொடர்பிலான வேலைகளுக்கு இணைப்பாளராக அமைச்சர் ஏ.எல்.எம் அதாவுல்லா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் இன்று ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தின் போது அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்காக 238 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியதாகவும் ஜவாத் தெரிவித்தார்

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கல்முனை இரவெளிக் கண்டத்தையும் பிரதான வீதியை இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்ட போது அது இடைநடுவில் நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0

 • smm.ramzan,kalmunai Saturday, 23 October 2010 04:56 AM

  நல்ல விடயம். கட்டாயம் செய்யப்பட வேண்டிய விடயம் இதைப் பற்றிய சிந்தனை யாருக்கும் வராதே நிலையல் உங்களுக்கு வந்ததை நான் பாராட்டுகிறேன். அல்ஹம்துலில்லாஹ்.

  Reply : 0       0

  Smm. Nafar from Qatar Monday, 11 October 2010 09:00 PM

  ippaalmanathu eppothe amaikkapada vendum aanal ippothuthan athadkaana neram vanthu irukkirathu. intha vaaippai yedpaduththi koduththa Abdul razzak avarkalukku mikka nanriyai therivithhtu kollukiren.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X