Super User / 2010 ஒக்டோபர் 21 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.அனுருத்தன் )
கல்முனை பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையமொன்றை நடத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 10,000 ரூபா சரீரப் பிணையில் செல்ல கல்முனை மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
குறித்த நபர் எதிர்வரும் 18ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமெனவும் அவர் உத்தரவிட்டார்.
மணற்சேனையில் இயங்கிவந்த குறித்த தொலைக்காட்சி நிலையத்தை நேற்று புதன்கிழமை மாலை முற்றுகையிட்ட கல்முனை பொலிஸார்,சட்டரீதியான அனுமதிப் பத்திரங்கள் எதுவும் உரிமையாளரிடம் இல்லை என கண்டு பிடித்தனர்.
இதனையடுத்து உரிமையாளரான சந்தேக நபர் சங்கரப் பிள்ளை பாலச்சந்திரன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இன்று கல்முனை நீதிவான நீதிமன்றத்தில் சந்தேக நபர் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் ஆஜர் செய்யப்பட்ட போது சந்தேக நபரை பிணையில் செல்ல அனுமதித்த நீதிபதி கைப்பற்றப்பட்ட பொருட்களை நீதிமன்ற காவலில் வைக்குமாறு பொலிஸாரை பணித்தார்
1 hours ago
1 hours ago
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
23 Oct 2025