2020 நவம்பர் 25, புதன்கிழமை

வெள்ள நிவாரண பணியில் ஈடுபட்ட ஜமாஅதே இஸ்லாமிய அமைப்புக்கு நாமல் ராஜபக்ஷ எம்.பி. பாராட்டு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 18 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

அக்கரைப்பற்று பிரதேசத்தில் வெள்ள அனர்த்த நிவாரணப் பணியில் ஈடுபட்ட ஜமாஅதே இஸ்லாமிய அமைப்பினருக்கு நாளைய இளைஞர் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ பாராட்டு தெரிவித்தார்.


கடந்த வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்றிற்கு நாமல் ராஜபக்ஷ விஜயம் செய்தபோதே, இவ்வாறு பாராட்டுத் தெரிவித்தார்.


அக்கரைப்பற்று பிரதேசத்தில் வெள்ள அனர்த்தம்  ஏற்பட்டதிலிருந்து அங்கு மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகள், அனர்த்த நலன்புரி நிலைய பராமரிப்பு போன்றவற்றை சிறப்பாக மேற்கொண்டமைக்கே பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.   இந்த அமைப்பினர் தற்போது அனர்த்தத்திற்கு பின்னர் தொற்றுநோய் தடுப்பு, மருத்துவ சிகிச்சை முகாம் போன்றவற்றை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .