2021 மார்ச் 08, திங்கட்கிழமை

யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி

Kogilavani   / 2012 நவம்பர் 08 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அஷ்ரப் நகர் பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கம்பி வேலியொன்றில் தொங்கிய நிலையில் நேற்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டது.

ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.சி.இப்றாகிம் என்ற 55 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அஷ்ரப் நகரில் சேனைப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வந்த இந்நபர், நேற்று முன்தினம் இரவு சேனைக் காவலுக்குச் சென்றிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக  அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலம் பிரேத பரிசோதனையை தொடர்ந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .