2020 நவம்பர் 28, சனிக்கிழமை

சிறுமியை கடத்திய சிறுவனுக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 18 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசாசரவணன்

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 14 வயதுச் சிறுமியொருவரை  கடத்திச்சென்று மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் 18 வயதுச் சிறுவனொருவனை 14 நாட்களுக்கு  விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவான்  ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா வியாழக்கிழமை (17) உத்தரவிட்டார்

இவர்கள் இருவருக்கிடையிலான காதல் உறவு காரணமாக கடந்த 15ஆம் திகதி இச்சிறுமி வீட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இச்சிறுமியை தந்தை தேடியபோது கிடைக்காத நிலையில், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில், தம்பிலுவில் பிரதேசத்தில் நண்பர் ஒருவர் வீட்டில் சிறுமியை மறைத்து வைத்திருந்தபோது சிறுமியையும் சிறுவனையும் கடந்த 16ஆம் திகதி கைதுசெய்த  திருக்கோவில் பொலிஸார், அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

சிறுமி  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள்.

இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--