Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 13 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.முஜாஹித்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது முஸ்லிம்களின் பாதுகாப்பு மட்டுமல்லாது உரிமைக் குரலுமாகும். சிறிய கட்சிகளை உருவாக்கி நாங்கள்தான் தேசிய தலைவர்கள் என்று இன்று சொல்லிக் கொள்பவர்களால் ஒருபோதும் அழித்துவிட முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவித்தார்.
நாவிதன்வெளியில் இடம்பெற்ற தேர்தல் பிராசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்குகளை வழங்குகின்றார்கள் என்பதற்காக அரசாங்கத்தில் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு அமைச்சு பதவிகளை பெற்றுக் கொண்டு அபிவிருத்தி செய்யவில்லை, தொழில் வாய்ப்பு வழங்கவில்லை அவர்கள் தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக் கொள்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
எனவே, முஸ்லிம்களின் பிரச்சினைகளை எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தைரியமாகவும் துணிச்சலாகவும் கையாளும் சக்தி எங்களுடைய முஸ்லிம் காங்கிரஸிக்கு மட்டும்தான் உள்ளது. வாக்கு பலத்தினை அதிகரிப்பதன் ஊடாக முஸ்லிம்களின் பேரம் பேசும் சக்தி அதிகரிக்கும். தேசிய தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டு வந்து மக்களின் வாக்குகளை சிதறடித்த பலர் இன்று முகவரியில்லாமல் குறிப்பாக பயந்த கொண்டு தேர்தல் பிரசாரம் செய்யுமளவுக்கு பின்னடைவை சந்தித்து வருவதை எம்மால் காணக்ககூடியதாகவுள்ளது. இவ்வாறான நிலை மாற்றியமைக்கப்பட்டு முஸ்லிம்களின் பேரம்பேசும் சக்தியைக் கொண்ட கட்சிக்கு ஒருமித்து வாக்களித்து முஸ்லிகளின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என்றார்.
3 minute ago
10 minute ago
14 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
10 minute ago
14 minute ago
19 minute ago