2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

தேர்தல் சட்ட விதிகளை மீறியோர் கைது

Administrator   / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா,எப்.முபாறக்

பொத்துவில் பிரதேசத்தில் தேர்தல் சட்ட விதிகளை மீறும் வகையில் தேர்தல் துண்டுப்  பிரசுரங்களை வாகனத்தில் கொண்டு சென்றமை மற்றும்  தேர்தல் பிரசுரங்களை விநியோகித்த இருவரை  இன்று (14) அதிகாலை 2.30 மணிக்கு பொத்துவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  வேட்பாளர் ஒருவரின் இலக்கம் மற்றும் புகைப்படம் பொறிக்கப்பட்ட 65 சிறிய அட்டைகள், 550 மாதிரி வாக்குச் சீட்டுகள் மற்றும் வாகனம் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, திருகோணமலை, புல்மோட்டை பிரதேசத்தில் போலி வாக்குச் சீட்டுகளை தம்வசம் வைத்திருந்த மூதூர் நெடுத்தீவு பிரதேசத்தை சேர்ந்த நபரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (14) உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .