2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

போலி வாக்குச்சீட்டுகளுடன் மூவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 17 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

போலியான வாக்குச்சீட்டுக்கள், தேர்தல் சுவரொட்டிகள், வேட்பாளர் விளம்பர அட்டைகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் தேர்தல் தினமான இன்று திங்கட்கிழமை அதிகாலை கல்முனையில் மூன்று பேரை கைதுசெய்ததாக  கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

தேர்தல் சட்டங்களை மீறி இவர்கள் மோசடியான வாக்குச் சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்கள் என்று பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தேர்தல் கண்காணிப்பு விசேட ரோந்துப் பொலிஸார் 54, 49, 32 வயதுகளையுடைய இவர்களை கைதுசெய்தனர்.

இந்த சந்தேக நபர்களிடமிருந்து முச்சக்கரவண்டி உட்பட 327 போலி வாக்குச்சீட்டுக்கள், 890 வேட்பாளர் விளம்பர அட்;டைகள், ஏழு பெரிய மற்றும் சிறிய சுவரொட்டிகள் ஆகியவற்றை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்தச் சந்தேக நபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .