2021 மார்ச் 08, திங்கட்கிழமை

‘காக்கி’களின் காட்டில் துணிந்து நிற்கும் வீரம்மிக்க ஒரு பெண்

Editorial   / 2021 பெப்ரவரி 22 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘காக்கி’களின் காட்டில் துணிந்து நிற்கும் வீரம்மிக்க ஒரு பெண்

எங்கெல்லாம் ​போட்டி, பொறாமை, முன்னேற்றத்துக்குத் தடைகளை ஏற்படுத்தல், கால் இழுப்புகள் இருக்காதென்று நினைக்கின்றோமோ, அங்குதான் மிகமோசமான முறையில், கழுத்தறுப்பதற்கான கத்திகள் மறைமுகமாகவும் வெட்டவெளியிலும் தீட்டப்பட்டு, அப்பட்டமாகவே வைக்கப்பட்டிருக்கின்றன.

அது, பெண் பிரதி பொலிஸ்மா அதிபர் பிம்ஷானி ஜாசிங் ஆராச்சியின் பதவியுயர்வின் ஊடாக, காக்கி சட்டைகளுக்குள்ளும் கசப்பானவைகள் இருக்கின்றன என்பதை வெளிச்சம் போட்டு காட்டிநிற்கிறது. இந்த விவகாரம் அடிப்படை மனித உரிமை மீறல் என்ற அடிப்படையில் உயர்நீதிமன்றம் வரைக்கும் சென்றுவிட்டது.

இன்னும் சில துறைகளில் பதவியுயர்வுகள் கிடைத்தாலும் அதைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாமல் இருக்கும் சில பெண்களும் இல்லாமல் இல்லை. பதவியுயர்வு கிடைத்துவிட்டதன் பின்னர், பழிவாங்கும் படலம் பலகோணங்களில் விஷ்வரூபமெடுத்து வரும்; அந்த வரிசையின் இறுதியில், பாலின அடிப்படையில் சவால் விடுக்கப்பட்டுள்ளது. வேண்டாத ஆண்களாயின் ‘பாலியல்’ ரீதியிலான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருந்தாலும் வியப்பதற்கில்லை.

இவ்வருடம் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதியுடன், இலங்கை பொலிஸ் சேவைக்கு 155 வயதாகிறது. ஆனால், இலங்கையின் பொலிஸ் சேவை சட்டத்தில் உள்ள பதவி உயர்வு குறித்த ஒழுங்கு முறையில், ‘பெண்’ணுக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவி வழங்குவதற்கான எந்தவோர் ஏற்பாடுகளும் இல்லையெனத் தெரிவித்தே, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களில் 32 பேர், பெண் பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டிருக்கும் பிம்ஷானி ஜாசிங் ஆராச்சியின் பதவியுயர்வை சவாலுக்கு உட்படுத்தி, மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்த செயற்பாட்டை, ஆணாதிக்க சிந்தனையென்றே சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த இவர், புலனாய்வுத்துறை, ஐ.நா அமைதி காக்கும் பிரிவுகளிலும் தென்சூடான், கிழக்கு திமோர் ஆகிய நாடுகளிலும் கடமையாற்றிய அனுபவங்களைப் பெற்றிருக்கின்றார்.

இலங்கை அரசியலமைப்பில், ‘பிரஜைகள் எவரும் பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டமுடியாது’ என மிகத்தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்நிலையில், உயர்பதவியிலிருக்கும் பெண்ணொருவர் ‘காக்கி சட்டை’க்களுக்கிடையில் சட்டத்தின் வாசலுக்கு இழுக்கப்பட்டுள்ளார்.

ஆனால், இருபாலாருக்கும் அப்பால், மூன்றாவது பாலினத்தவரும் எந்தத் துறையிலும் உயர் பதவிகளை வகிக்கலாமென சட்டங்கள் பல நாடுகளிலும் திருத்தப்பட்டுள்ளன. இங்குமட்டும்தான், பழைய சட்டங்கள், அப்படியே


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .