2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

அப்துல் சத்தார் ராஜினாமாவை வதந்தியென்கிறது ஷிவ்சேனா

Editorial   / 2020 ஜனவரி 05 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பை, 

அவுரங்காபாத் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் அப்துல் சத்தார் மராட்டிய சட்டசபை தேர்தலுக்கு முன் ஷிவ்சேனாவில் இணைந்து அக்கட்சி சார்பில் சில்லோடு தொகுதியில் போட்டியிட்டு 3-வது முறையாக எம்.எல்.ஏ. ஆனார்.

இவருக்கு கடந்த 30ஆம் திகதி நடந்த மராட்டிய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது அமைச்சர்  பதவி கிடைத்தது.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசாங்கத்தில் அமைச்சரவை  அந்தஸ்து அமைச்சராக இருந்த அப்துல் சத்தாருக்கு ஷிவ்சேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசாங்கத்தில் இணை அமைச்சர் பதவியே கிடைத்தது.

இதனால். அவர் அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  அமைச்சரவை அந்தஸ்து கிடைக்காத விரக்தியில் அவர்   தனது   பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியது.

இது ஷிவ்சேனாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் அப்துல் சத்தார் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுவதை ஷிவ்சேனா நிராகரித்து உள்ளது.

இதுகுறித்து ஷிவ்சேனா மூத்த தலைவர் அர்ஜூன் கோத்கர் கூறுகையில்,

அப்துல் சத்தார்   அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக வதந்தி பரப்படுகிறது.

அதில் எந்த உண்மையும் இல்லை.   

அவர் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை சந்திப்பார் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .