2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

அரசாங்கத்திலிருந்து 20 காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்கள் விலகல்

Editorial   / 2020 மார்ச் 10 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல் நாத்தின் அரசாங்கத்தில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குறைந்தது 20 சட்டசபை உறுப்பினர்கள் விலகிய நிலையில் நெருக்கடிக்குள் மத்திரப் பிரதேசம் சிக்கியுள்ளது.

கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவுக்கு 17 சட்டசபை உறுப்பினர்கள் நேற்றிரவு சென்றுள்ளனர்.

இந்நிலையில், குறித்த 20 சட்டசபை உறுப்பினர்களின் இராஜினாமாவும் ஏற்கப்படும் சந்தர்ப்பத்தில் 15 மாதங்களேயான முதலமைச்சர் கமல்நாத் அரசாங்கத்தின் நான்கு சட்ட உறுப்பினர்களின் பெரும்பான்மையையானது 230 சட்டசபை உறுப்பினர்களைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டசபையில் சிறுபான்மையாக வீழ்ச்சியடைவதுடன், கவிழ்க்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இன்னும் ஐந்து தொடக்கம் ஆறு வரையான சட்டசபை உறுப்பினர்கள் விலகக் காத்திருப்பதாக தகவல் மூலங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தின் தலைநகர் போபாலிலுள்ள ஹொட்டலொன்றில், மத்தியப் பிரதேசத்திலுள்ள பாரதிய ஜனதாக் கட்சியின் (பா.ஜ.க) சட்டசபை உறுப்பினர்கள் இன்று மாலை சந்திக்கவுள்ளனர். இக்கூட்டத்தின்போது மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியமைக்க பா.ஜ.க உரிமை கோரும் என எதிர்பார்க்கப்பட்டிருந்ததுடன், மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சோக்கானை தமது பிரதமர் வேட்பாளராக நிறுத்தும் எனவும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .