Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மார்ச் 05 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக அனுமதியின்றி போராடுவோரை கைது செய்து அப்புறப்படுத்தும்படி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கெதிராக இந்தியா முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பாரதிய ஜனதாக் கட்சி, அதன் கூட்டணி கட்சியினர் பேரணி நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டிலும் ஆங்காங்கே போராட்டங்கள் நீடிக்கின்றன. பல்வேறு பகுதிகளில் பொலிஸாரிடம் உரிய அனுமதி பெறாமலேயே போராட்டங்கள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் திருப்பூரில் நடைபெற்றும் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனுமதியின்றி போராடுபவர்களை கைது செய்து அப்புறப்படுத்தும்படி பொலிஸாருக்கு இன்று உத்தரவு பிறப்பித்தனர்.
12 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
19 minute ago