2026 மே 13, புதன்கிழமை

dd

சிசுவை இழந்த தாயின் குமுறல்

Mayu   / 2026 மே 13 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கீத பொன்கலன்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் பிரசவத்தின்போது தனது குழந்தை உயிரிழந்தமைக்கு வைத்தியர்களின் கவனக்குறைவே காரணம் எனத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

திருகோணமலையைச் சேர்ந்த குறித்த தாய், கடந்த ஏப்ரல் மாதம் 09-ஆம் திகதி பிரசவத்திற்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதன்போது பிரசவம் நடைபெற்ற நிலையில், குழந்தை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்துத் திருகோணமலை துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ள தாயார், அங்கு கடமையிலிருந்த வைத்தியர்களின் பாரிய கவனக்குறைவு காரணமாகவே தனது குழந்தை உயிரிழந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். உரிய நேரத்தில் முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை என்பதே அவரது பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.

பாதிக்கப்பட்ட தாயாரினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து, திருகோணமலை துறைமுகப் பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வைத்தியசாலை தரப்பில் நிலவியதாகக் கூறப்படும் கவனக்குறைவு குறித்துத் துறைசார் விசாரணைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரசவத்தின்போது சிசு உயிரிழந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், மருத்துவச் சேவைகள் குறித்த அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .