Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Editorial / 2020 மார்ச் 01 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி,
டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடந்த வாரம் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வடகிழக்கு பகுதியான ஜாப்ராபத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் அருகில் உள்ள பகுதிகளுக்கும் தீயாக
பரவியது. மவுஜ்பூர், கோகுல்புரி, பஜன்புரா, சந்த்பாக், பாபர்பூர், யமுனா விகார் போன்ற வடகிழக்கு பகுதிகள் வன்முறையாளர்களின் பிடியில் சிக்கி சின்னாபின்னமானது.
வன்முறையாளர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து கற்களால் தாக்கிக்கொண்டனர். துப்பாக்கியால் சுட்டும் வெறியாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் வீடுகள், வணிக கட்டடங்கள், வழிபாட்டுத் தலங்கள், வாகனங்களுக்குத் தீ வைத்தனர்.
சுமார் 4 நாள்களு க்கும் மேலாக நடந்த வன்முறையில் அந்த பகுதிகள் போர்க்களம்போல் காட்சியளித்தது.
நாட்டையே உலுக்கிய இந்த வன்முறை சம்பவங்களில் 42 பேர் உயிரிழந்தனர். சுமார் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வன்முறை தொடர்பாக 600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களில் இன்று முதல் படிப்படியாக அமைதி திரும்பி வருகிறது. பல இடங்களில் கடைகள், வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில் வன்முறையால் பாதித்த இடங்களில் பொதுமக்கள் நேற்றுமுன்தினம் வழக்கம்போல் தங்களது பணிகளைத் தொடங்கினார்கள்.
கடைகள் உள்ளிட்ட நிறுவனங்கள் காலையில் திறக்கப்பட்டன. கடைகளில் பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை மக்கள் வாங்கினார்கள்.
பொதுமக்கள் தங்கள் அன்றாட பணிகளை தொடங்கியதால் சாலைகளில் ஆட்கள் நடமாட்டத்தை காண முடிந்தது.
வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. பல இடங்களில் வெறிச்சோடிய சாலைகளில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர்.
அந்த பகுதிகளில் இன்றும் பாதுகாப்பு படையினர், பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
சில இடங்களில் மக்களின் அச்சத்தைப் போக்குவதற்காக பாதுகாப்பு படை வீரர்கள் அணிவகுப்பு நடத்தினர். வதந்திகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என அவர்கள் பொதுமக்களிடம் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago
2 hours ago