Editorial / 2020 ஜனவரி 19 , பி.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
தமிழக பாஜக தலைவர் யார் என்று இன்னும் முடிவாகவில்லை. எனவே,
இதுதொடர்பான வதந்திகளை கட்சியினர் நம்ப வேண்டாம் என்று பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனதுமுகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:
தமிழக பாரதிய ஜனதாக் கட்சியின் புதிய மாநிலத் தலைவர் பற்றி பல்வேறுவிதமான வதந்திகளும், சித்தரிப்புகளும் கடந்த பல நாள்களாக
பத்திரிகைகளிலும், சமூக ஊடகங்களிலும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப கற்பனை செய்து கொண்டு செய்திகள் வெளியிட்டு வருகின்றனர். இவை உண்மைக்கு மாறானவை.
தமிழக பாஜக தலைவர் யார் என்று இன்னும் முடிவாக வில்லை. இதற்கு இன்னும் ஒருசில வாரங்கள் ஆகும். முடிவாகும்போது அந்ததகவல் அதிகாரப்பூர்வமாக கட்சிசார்பில் அறிவிக்கப்படும்.
தவறான தகவல்களை தந்துநமக்குள்ளே குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள்.
இவ்வாறுகேசவ விநாயகம் தெரிவித்துள்ளார்.
29 minute ago
27 Dec 2025
27 Dec 2025
27 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
27 Dec 2025
27 Dec 2025
27 Dec 2025