2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

‘தே.மு.தி.க ஒருநாள் ஆட்சி அமைக்கும்’

Editorial   / 2019 நவம்பர் 07 , பி.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய முற்போக்கு திராவிடம் கழகம் (தே.மு.தி.க) நிச்சயம் ஒருநாள் ஆட்சி அமைக்கும எனவும், அதற்கான காலம் கனியும் எனவும் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை, கோயம்பேட்டிலுள்ள தே.மு.தி.க அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்ததைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்திக்கும்போதே மேற்படி கருத்தை பிரேமலதா வெளிப்படுத்தியிருந்தார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், “நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி முடிவாகும் பொழுது நாங்கள் அமெரிக்காவில் சிகிச்சைக்காக சென்றோம். அதனால், எங்களுக்கான இடங்களை கேட்டு பெற முடியாமல் அவர்கள் கொடுத்த நான்கு இடங்களில் போட்டியிட்டோம். ஆனால் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியில் உள்ள அனைவரையும் குழு அமைத்து, எங்களுக்கு எத்தனை சதவீத இடங்கள் வேண்டும் என பேசி முடிவு செய்வோம்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்ட போது, தே.மு.தி.கவின் பலம் அனைவருக்கும் தெரிந்து இருக்கும். எங்கள் பலத்தை அறிந்த முதல்வர் உள்ளாட்சி தேர்தலில் உரிய இடங்கள் வழங்குவதாக தெரிவித்தார்.

தற்போது ஆளும்கட்சியான அனைத்திந்தியா அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருந்தாலும், நிச்சயம் ஒருநாள் தே.மு.தி.க ஆட்சி அமைக்கும். எங்களுக்கும் அதற்கான காலம் வரும்” என்று கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .