Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 நவம்பர் 09 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
அயோத்தியில் பாபர் மசூதி, வெற்றிடத்தில் கட்டப்படவில்லை என்று இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனது தீர்ப்பில் கூறினார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.
சமரசக் குழுவின் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், 40 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (09)தீர்ப்பு வழங்கி வருகிறது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷண், டி.ஒய்.சந்திரசூட், எஸ்.அப்துல் நஸீர் ஆகியோரை கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது. அனைத்து நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை வழங்கினர்.
தலைமை நீதிபதி தீர்ப்பை வாசித்து வருகிறார். தீர்ப்பில் அவர் கூறியதாவது:
பாபர் மசூதி மிர்பாகியால் கட்டப்பட்டது
இறையியல் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது சரியானதல்ல
ஒரு பிரிவினரின் நம்பிக்கையை மறு பிரிவினர் மறுக்க முடியாது
மசூதியில் 1949-ம் ஆண்டில் சிலைகள் வைக்கப்பட்டன.
மதச்சார்பின்மையே அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை ; அதன்படியே உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது
தொல்லியல் துறை ஆதாரங்களை புறக்கணிக்க முடியாது
தொல்லியல் துறை ஆதாரங்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை
அயோத்தியில் காலியிடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை. பாபர் மசூதியில் அடித்தளத்தில் இருக்கும் அமைப்பு இஸ்லாமிய முறைப்படி கட்டப்படவில்லை
44 minute ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
4 hours ago
5 hours ago
6 hours ago