Editorial / 2026 ஏப்ரல் 08 , பி.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் இயந்திரம் இன்று (08) மாலை 3.00 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்துள்ளது.
தூரப் பிரதேசங்களில் இருந்து நிலையத்திற்கு வரும் ரயில்களை, நிலைய எல்லைக்குள் இழுத்துச் சென்று நிறுத்தும் பணிகளுக்காக இந்த இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இன்று மதியம் கொழும்பிலிருந்து வந்த ரயிலின் பெட்டிகளை இடமாற்றும் பணியில் குறித்த இயந்திரம் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதே, திடீரென இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்து குறித்து கருத்து தெரிவித்த பிரதான புகையிரத நிலைய அதிபர் எஸ். சர்வேஸ்வரன்,
"தீப்பிடித்தமைக்கான காரணம் குறித்து தற்போது உறுதியாகக் கூற முடியாதுள்ளது. எனினும், தீயணைப்புப் படையினர் இது குறித்து விசாரணை நடத்தி விரைவில் தகவல்களை வழங்குவார்கள்," எனத் தெரிவித்தார்.
இந்தத் தீ விபத்தினால் ரயில் இயந்திரம் பாரிய அளவில் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

9 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
11 Apr 2026
11 Apr 2026