Freelancer / 2026 ஏப்ரல் 11 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரான் மீதான போர் கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி தொடங்கியதிலிருந்து, சர்வதேச நிதிச் சந்தைகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சில மர்மமான வர்த்தகங்கள் அரங்கேறி வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, அமெரிக்க அரசின் முக்கியமான கொள்கை முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாகவே, சந்தையில் பெரும் முதலீடுகள் செய்யப்படும் போக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெனிசுலா மீதான தாக்குதல், ஈரான் மீதான தாக்குதல், அமெரிக்க - ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே இன்சைடர் டிரேடிங் நடைபெற்றதாகவும், அதன் மூலம் சில வர்த்தகர்கள் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. வெள்ளை மாளிகையில் இரகசியத் தகவல்களை முன்கூட்டியே அறிந்து இந்த ‘உள்நோக்க வர்த்தகம்' நடைபெற்றிருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் வர்த்தக உலகில் பலரிடம் எழுந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் வரை இத்தகைய முறைகேடுகளை மறுத்து வந்த வெள்ளை மாளிகை, ஏப்ரல் மாதத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. ரகசியக் கொள்கை முடிவுகள் தொடர்பான அரசு ஊழியர்கள் சந்தைகளில் வர்த்தகம் செய்யக் கூடாது என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. (a)
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago