2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

புரிந்து கொள்ளவில்லை.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நித்யானந்தா

Editorial   / 2019 நவம்பர் 24 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாமியார் நித்யானந்தா மற்றும் அவரது ஆசிரமம் மீதான சர்ச்சைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் குஜராத் மாநிலம் அகமதாபாத் பொலிஸில் நித்யானந்தா மீது புகார் அளித்தார். 

இதனையடுத்து, கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக நித்தியானந்தா வெளிநாடு தப்பி ஓடி விட்டதாக தகவல் வெளியானது.

தற்போது அவர் அமெரிக்க கண்டத்தில் உள்ள கரீபியன் கடல் பகுதியில் 2 குட்டித்தீவுகளை உள்ளடக்கிய பிரினிடாட் அன்ட் டொபோகோ என்னும் நாட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது. அவரை பிடிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் பொலிஸாரை கிண்டல் செய்து புதிய வீடியோவை நித்யானந்தா வெளியிட்டு உள்ளார். அதில், “நான் பேசும் தமிழ் யாருக்குமே புரியவில்லை. பேச்சை புரிந்து கொள்ளாமல் காவல்துறை என்மீது வழக்கு பதிவு செய்து விடுகிறார்கள். தமிழகத்தில் ஏதேனும் ஒரு பிரச்சனையை மடை மாற்ற வேண்டும் என்றால் அதற்கு என்னை மட்டுமே குறி வைக்கிறார்கள்.” என்று பேசியுள்ளார்.

பிரச்சனைகளுக்கு மேல் பிரச்சனை வந்தாலும் எத்தனை சர்ச்சைகளில் சிக்கினாலும் அதைபற்றி எதுவும் குறிப்பிடாமல் மௌனம் காத்துவந்த நித்யானந்தா, தற்போது தன்மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்தவுடன் அவர்களை கண்டித்து பேசி இருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .