2021 ஜனவரி 16, சனிக்கிழமை

‘பெரும்பான்மையை ஃபட்னாவிஸ் நிரூபிக்க வேண்டும்’

Editorial   / 2019 நவம்பர் 26 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் மகாராஷ்ராவில் அதிர்ச்சிகரமாக பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சியமைத்ததை சவாலுக்குட்படுத்திய வழக்கில், 24 மணித்தியாலங்களுக்குள் அல்லது நாளைக்குள் மகாராஷ்ரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், அவரது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என இந்திய உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பானது நேரலையாக ஒளிபரப்பப்படும் எனத் தெரிவித்த நீதியரசர்கள் என்.வி. ரமணா, அஷோக் பூஷன், சஞ்சீவ் கண்ணா ஆகியோரைக் கொண்ட நீதியரசர்கள் அமர்வு, தற்காலிக சபாநாயகரின் கீழ் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

இது தவிர, நம்பிக்கை வாக்கெடுப்பானது இரகசிய வாக்கெடுப்பு முறையில் நடைபெறாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இதேவேளை, புதிதாகத் தேர்தெடுக்கப்பட்ட மகாராஷ்ரா சட்டசபையின் உறுப்பினர்கள் அனைவரும் நாளை மாலை ஐந்து மணிக்குள் பதவியேற்பதை உறுதி செய்யுமாறு மகாராஷ்ரா ஆளுநர் பகத் சிங் கொஷ்யரிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தற்காலிக சபாநாயகரை பகத் சிங் கொஷ்யரி நியமிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .