Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 07 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மும்பை,
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. அந்த வகையில், மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள மிகவும் புகழ்பெற்ற 'கேட் வே ஆப் இந்தியா' பகுதியில் திரண்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விடிய விடிய மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.இன்று காலை போராட்டக்கார்களை கேட் வே ஆப் இந்தியாவில் இருந்து வெளியேற்றிய பொலிஸார் ஆசாத் மைதானத்துக்கு அழைத்துச் சென்றனர்.
முன்னதாக, நேற்றிரவு இடம்பெற்ற போராட்டத்தின் போது, காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகையை போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் ஏந்தியபடி நின்றார்.
இந்த விவகாரம் செய்திகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஷிவ்சேனா எம்.பி சஞ்சய் ராவத், “காஷ்மீர் விடுதலை என்ற வாசகங்கள் அடங்கிய பதாகையை வைத்திருந்தவர், இணையதள
கட்டுப்பாடு உள்பட காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் இருந்து விடுதலை வேண்டும் என்ற நோக்கத்துடனேயே வைத்திருந்ததாக விளக்கம் அளித்திருப்பதாக செய்தித்தாள்களில் பார்த்தேன்.
இந்தியாவில் இருந்து காஷ்மீருக்கு சுதந்திரம் வேண்டும் என்று யாராவது பேசினால் நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago