Editorial / 2020 ஜனவரி 05 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகளை வெளியேற்றுவதுதான் மத்திய அரசாங்கத்தின் அடுத்த பணி என்று மத்திய
அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். ஜம்மு காஷ்மிர் யூனியன் பிரதேசம் ஜம்முவில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:
“புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டத்தின்படி, ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் நமது நாட்டில் தங்கியிருக்க முடியாது.
இனி அவர்களை இந்த நாட்டிலிருந்து வெளியேற்றுவது தான் மத்திய அரசாங்கத்தின் அடுத்த பணியாக இருக்கும்.
மேற்கு வங்கம் வழியாக இந்தியாவுக்குள் புகுந்து பல மாநிலங்களைக் கடந்து ஜம்முவுக்குள் ரோஹிஞ்சா அகதிகள் குடியேறியது எப்படி என்பது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்.
நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ள ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் குறித்து கணக்கெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
6 hours ago
8 hours ago
28 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
28 Dec 2025