2020 ஜூலை 15, புதன்கிழமை

ஆந்திராவில் மேலும் 704 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

A.K.M. Ramzy   / 2020 ஜூன் 30 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமராவதி,

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் கணிசமாகவே உயர்ந்து வருகிறது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது.

ஆந்திராவில் நேற்று வரை கொரோனா பாதித்த வர்களின் எண்ணிக்கை 13,891 ஆக உள்ளது

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஆந்திராவில்  மேலும் 704 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் அங்கு கொரோனா வால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,595 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு புதிதாக 7 பேர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 187 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு தற்போது வரை 7,897 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதுவரை மாநிலத்தில் 6511 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X