2020 மே 31, ஞாயிற்றுக்கிழமை

காஷ்மிரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை

Editorial   / 2020 மே 19 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவின் ஜம்மு காஷ்மிரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மிரின் தலைநகர் ஶ்ரீநகருக்கு அருகேயுள்ள நவகடல் என்ற பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் நேற்றிரவு பொலிஸார், துணைப் படைப் பொலிஸார் அங்கு சென்றிருந்தனர்.

இந்நிலையில், பாதுகாப்புப் படையினரை நோக்கி இன்று அதிகாலை பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சுட்டதையடுத்து கடும் துப்பாக்கிச்சண்டை வெடித்து ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X